About the Conference
மனிதராய் இருத்தல்; தமிழராய் விளங்கல்
மூன்றாவது தமிழியல் மாநாடு │
தொறொன்ரோப் பல்கலைக் கழகம் │ மே 15-17, 2008
சிறப்புப் பேருரை: பேராசிரியர் டேவிட் ஷுல்மன்
ஹீப்றூ பல்கலைக் கழகம்
ஜெருசலேம்
சிறப்பு அரங்கு: கவிஞர் எம். ஏ. நூஃமான் (இலங்கை)
எழுத்தாளர் பாமா (தமிழ்நாடு)
தொறொன்ரோப் பல்கலைக் கழகத்தின் தென்னாசியக் கற்கைகளுக்கான நிலயமும், வின்சர்
பல்கலைக் கழகமும் இணைந்து நடத்தும் தமிழியல் மாநாட்டில் ஐம்பதிற்கும் அதிகமான
பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். யாழ்ப்பாணப்
பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஹாவர்ட் பல்கலைக் கழகம், லீட்ஸ்
பல்கலைக் கழகம், ஸ்டொக்ஹோம் பல்கலைக் கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்
கழகங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள்.
பங்கு பற்ற விரும்புவோர் இணையத்தளமூடாக முன்பதிவு செய்தல் அவசியம். 120 இடங்கள்
மட்டுமே உள்ளன.